பதட்டம்
சீஷத்துவ பத்திரிகையின் ஒரே நேரத்தில் ஒரு புத்தகம் வாசிப்பு திட்டம்
இது வேதாகமத்தின் ஒரு புத்தகத்தை ஒரு நேரத்தில் எழிதில் பின்பற்ற உதவும் வழிகாட்டி. டிசிப்பில்சிப் பத்திரிக்கையை தழுவி நீங்கள் ஒரு வருடத்தில் படிக்க வேண்டிய திட்டத்தை வழங்குகிறது.
பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை
சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது, இந்த சூழ்நிலையில் தேவன் நமக்கு தரும் தீர்வு என்ன, மரணமானாலும் ஜீவனானாலும் அவைகளை குறித்த நமது நம்பிக்கை என்ன என்பதை குறித்து வேதம் நமக்கு என்ன கற்றுகொடுக்கிறது ஆகிய காரியங்களை குறித்து இந்த தியானத்திட்டதின் கீழ் நாம் படிக்க இருக்கிறோம்.
பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்
ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.
பலங்கொண்டு திடமனதாயிரு!
நீ நிறைய சவால்களை சந்திக்கிறாயா? உன்னை பயமுறுத்துவதுதான் பிசாசின் தந்திரம். அவன் கெர்ஜிக்கிற சிங்கத்தைப்போல உன்னைச் சுற்றித்திரிகிறான். ஆனால் திடமனதாயிரு என்று சொல்பவரோ, உன்னை அதைரியப்படுத்தும் எதையும் விட வலிமையானவர். உன்னை பலப்படுத்தக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே! வாழ்வின் உபத்திரவங்களுக்கு மத்தியில் உன் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை அவர் மீது வைத்துவிட்டு, நீ வலிமையாகவும் தைரியமாகவும் செயல்படும்படி, பலங்கொண்டு திடமனதாயிருப்பது எப்படி என்பதை நாம் இந்த தியானத்தின் வாயிலாகக் காண்போம்.
இந்தக் கிறிஸ்துமஸ் கைவிடாதே, மேலே பார்
"விஷயங்கள் மேலே பார்க்கின்றன" என்ற சொற்றொடரை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். நிலைமை மேம்பட்டு வருகிறது என்று அர்த்தம். நாம் மேலே பார்க்கத் தொடங்கும்போது விஷயங்கள் மேலே பார்க்கத் தொடங்கும் என்று பைபிள் சொல்கிறது. உங்கள் சூழ்நிலைகளை விட்டுவிட்டு தேவனின் மீது உங்கள் பார்வையை வைக்கவும்.
தலைகீழ் இராஜ்ஜியம்: மலைப் பிரசங்கத்தில் 8 நாட்கள் வேதபாடத் திட்டம்
இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் (மத்தேயு 5:2–12), உலகிலிருந்து வேறுபட்டு, எதிர் கலாச்சாரத்தில், கிறிஸ்துவில் வேரூன்றிய ஒரு புதிய அடையாளத்துடன் வாழும்படி நம்மை வலியுறுத்துகிறார். தலைகீழ் இராஜ்ஜியம் எனும் இந்த வாசிப்புத்திட்டம் அத்தகைய எதிர் உள்ளுணர்வு ஞானத்தையும், இன்றைய நாட்களுக்கு அது பொருந்துமா என்றும் ஆராய்கிறது.
நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பது
நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.