பதட்டம்
இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்
நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.
ஒன்றுக்கும் கவலையில்லை
அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் மாக்ஸ் லுகாடோ பிலிப்பியர் 4:4-8 இல் காணப்படும் கவலைக்கான கடவுளின் சிகிச்சை திட்டத்தை ஆராய்கிறார். இந்த சிகிச்சையை - கடவுளின் நன்மையைக் கொண்டாடுவது, அவருடைய உதவியைக் கேட்பது, அவருடன் உங்கள் கவலைகளை விட்டுவிட்டு, நல்ல விஷயங்களைத் தியானிப்பது - இவைகளை நீங்கள் பின்பற்றும்போது, கடவுளின் சமாதானத்தை அனுபவிப்பீர்கள். கவலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த வேண்டியதில்லை
சரியில்லை
நாம் அனைவரும் சந்திக்கும் நான்கு முக்கியமான மன அழுத்தங்களைப் பற்றி பார்ப்போம் மற்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தேவரின் வார்த்தைகள் எவ்வாறு நமக்கு ஆறுதல், வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்குகின்றன என்பதையும் காண்போம். நீங்கள் சரியில்லாதபோது இயேசு உங்களுக்கு என்ன வழங்குகிறார், மக்கள் உங்களை நிராகரிக்கும்போது கடவுள் உங்களுக்கு தெரிய வேண்டியது என்ன, சரியானதைச் செய்வது எளிதல்லாதபோது என்ன செய்ய வேண்டும், மற்றும் நாம் கவலைப்படும்போது கடவுள் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.
நிச்சயமற்ற காலங்களில் உறுதி
நிச்சயமற்ற நிலைமைகளிலும், நிச்சயமானவராய் இருக்கும் தேவன்! நாம் சகோதரர் டேவிட் வில்லா அவர்களுடன் இணைந்து இந்த சமீபத்திய திட்டத்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர் மறையைக் கடந்து மிகவும் பெரிய சிறப்பான ஒன்றை அடைவதற்காக தியானிக்க இருக்கிறோம்.
வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்
கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.
உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கு மெய்யாகவே நிறைவேறுமா என்று நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம்! ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை, உன் எல்லா சூழ்நிலைகளிலும் உனக்கு அவைகள் உண்மையானதாகவே இருக்கும். நீ ஆண்டவரை விசுவாசித்து, தினமும் அவருடன் நடக்கும்போது, அவர் உனக்காக வைத்திருக்கும் 7 வாக்குத்தத்தங்களையும் எப்படி பெற்றுக்கொள்வாய் என்பதை பற்றியதே இந்த வாசிப்பு திட்டம்.
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே: கடவுள் என்னுடன் இருக்கிறார்
ஏழு வாரத் தொடரில் இது முதல் வாரமாகும், கவலையின் போராட்டங்களில், இது வேதாகமத்தின் உண்மை மற்றும் கடவுளின் வாக்குறுதிகளை பிடித்துக்கொண்டு உங்களை அழைத்துச் செல்கிறது. இந்த எட்டு நாள் திட்டம், கவலையின் மத்தியிலும் இயேசுவின் அன்போடு உங்கள் இதயத்தையும் மனதையும் சீரமைக்க ஊக்கத்தையும் நடைமுறை பயன்பாட்டையும் வழங்குகிறது. இந்த வார வாக்குறுதி: கடவுள் என்னுடன் இருக்கிறார்.
கவலையை மேற்கொள்ளுதல்
இந்த வாசிப்புத் திட்டம் வேத வசனமான பிலிப்பியர் 4:6-7ஐ அடிப்படையாகக் கொண்டது. தேவனுடைய வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், உங்களால் சகல கவலைகளிலிருந்தும் விடுபட முடியும்... நான் அதை விசுவாசிக்கிறேன்! இந்தத் தொடர் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டிருக்கும் கவலைகளை மேற்கொண்டு ஜெயிக்க உங்களுக்கு உதவும்...
நம்பிக்கை
நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. பின்வரும் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், உங்களது எல்லா நாட்களிலும் நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு இது உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!