தானியேல் 3:28
தானியேல் 3:28 TRV
அப்போது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக! அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளையை எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத் தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, அதற்காக தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள்.


