தானியேல் 12

12
முடிவு காலம்
1“அக்காலத்தில் உன் மக்களைப் பாதுகாக்கின்ற பிரதான அதிபதியாகிய மிகாயேல் எழுவான். எந்தவொரு இனமும் தோன்றியதிலிருந்து அதுவரை ஒருபோதும் நிகழ்ந்திராத துன்பகாலம் ஒன்று வரும். ஆனால் அந்தக் காலத்தில் இறைவனது#12:1 இறைவனது – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டவர்களாகக் காணப்படுகின்ற உனது மக்கள் விடுவிக்கப்படுவார்கள். 2பூமியில் புழுதியில் புதைக்கப்பட்டிருக்கின்ற அநேக மக்கள் எழுந்திருப்பார்கள். சிலர் நித்திய வாழ்வுக்கும், மற்றவர்கள் நித்திய வெட்கத்துக்கும், இழிவுக்கும் எழுந்திருப்பார்கள். 3ஞானமுள்ளவர்கள் வானங்களின் பிரகாசத்தைப் போலவும், பலரை நேர்மைக்கு வழிநடத்துகின்றவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றும் பிரகாசிப்பார்கள். 4ஆனால் தானியேலே, நீயோ புத்தகச் சுருளின் வார்த்தைகளை முடிவு காலம் வரைக்கும் மூடி முத்திரையிட்டு வை. பலர் அங்குமிங்கும் ஓடித் தேடுவார்கள். அறிவோ வளரும்” என்றார்.
5அப்போது தானியேலாகிய நான் பார்க்கையில், இதோ ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும், அக்கரையில் ஒருவனுமாக இன்னும் இருவர்#12:5 இருவர் – தூதர்கள் இருவர் எனக்கு முன்பாக நிற்பதைக் கண்டேன். 6மென்பட்டு உடை உடுத்தி, ஆற்றின் தண்ணீரின் மேல் நின்ற மனிதனிடம் அவர்களில் ஒருவன், “இந்தத் திகைப்பூட்டும் சம்பவங்கள் நிறைவேற எவ்வளவு காலம் எடுக்கும்?” என்று கேட்டான்.
7அப்போது மென்பட்டு உடை அணிந்து ஆற்றின் தண்ணீரின் மேல் நின்ற மனிதன் தன் வலதுகையையும், இடதுகையையும் வானத்தை நோக்கி உயர்த்தி, என்றென்றும் வாழ்கின்ற இறைவன்#12:7 இறைவன் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. மீது ஆணையிட்டு, “ஒரு காலமும், காலங்களும், அரைக் காலமும் செல்லும்.#12:7 1 வருடமும், 2 வருடங்களும், 1/2 வருடமும். மொத்தமாக 3 1/2 வருடங்கள். கடைசியாக பரிசுத்த மக்களின் வல்லமை முறியடிக்கப்படுவது முடிவுக்கு வரும்போது இவை முழுவதும் நிறைவேறும்” என்று சொல்லக் கேட்டேன்.
8நான் இந்த பதிலைக் கேட்டேன்; ஆனால் எனக்கோ அது புரியவில்லை. எனவே நான் அவரிடம், “ஆண்டவனே, இவை எல்லாவற்றினதும் இறுதி முடிவு என்னவாகும்?” என்று கேட்டேன்?
9அப்போது அவர், “தானியேலே, உன் வழியில் போ; ஏனெனில், கடைசிக் காலம் வரும் வரைக்கும் இந்த வார்த்தைகள் மூடி முத்திரையிடப்பட்டிருக்கின்றன” என எனக்குப் பதிலளித்தார். 10“அநேகர் தூய்மையாக்கப்பட்டு, கறையற்றவர்களாக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவார்கள். ஆயினும் தீயவர்கள் தொடர்ந்து தீயவர்களாகவே இருப்பார்கள். தீயவர்களில் யாரும், இவற்றை விளங்கிக்கொள்ள மாட்டார்கள். ஞானமுள்ளவர்களோ விளங்கிக்கொள்வார்கள்.
11“அன்றாட பலி நிறுத்தப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு வைக்கப்பட்டது முதல் 1,290 நாட்கள் செல்லும். 12இவ்வாறு 1,335 நாள்வரை காத்திருந்து அதன் முடிவைக் காண்கின்றவன் ஆசீர்வதிக்கப்படுவான்.
13“தானியேலே#12:13 தானியேலே – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது., நீயோ முடிவுவரை உன் வழியே போ; அதன் பின்னர் இளைப்பாறுவாய். நாட்களின் முடிவில், உனக்கென நியமிக்கப்பட்டிருக்கும் பங்கை அடைவதற்கு நீ எழுந்திருப்பாய்” என்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தானியேல் 12: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்