ஆமோஸ் 7:14-15
ஆமோஸ் 7:14-15 TRV
அதற்கு ஆமோஸ் அமத்சியாவிடம், “நான் இறைவாக்கினனும் அல்ல, இறைவாக்கினனின் மகனும் அல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திமரங்களை பராமரிக்கிறவனுமாய் இருந்தேன். ஆனால் மந்தை மேய்த்துக்கொண்டிருந்த என்னைக் கர்த்தர் அழைத்து, ‘நீ போய், இஸ்ரயேலரான என் மக்களுக்கு இறைவாக்குச் சொல்’ என கட்டளையிட்டார்.


