ஆமோஸ் 1:1-2
ஆமோஸ் 1:1-2 TRV
தெக்கோவா நகரத்தின் மேய்ப்பர்களில் ஒருவனான ஆமோஸின் வார்த்தைகள்: பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் கண்ட தரிசனம் இதுவே: அக்காலத்தில் யூதா பிரதேசத்துக்கு அரசனாக உசியாவும், இஸ்ரயேல் பிரதேசத்துக்கு அரசனாக யோவாஸின் மகன் யெரொபெயாமும் இருந்தார்கள். ஆமோஸ் சொன்னதாவது: “கர்த்தர் சீயோனிலிருந்து கர்ச்சிக்கிறார்; எருசலேமிலிருந்து முழங்குகிறார். மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் வரண்டு போகின்றன. கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகின்றது.”


