எரேமியா 29:11-13

எரேமியா 29:11-13 TAOVBSI

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

எரேமியா 29:11-13 க்கான வசனப் படங்கள்

எரேமியா 29:11-13 - நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.எரேமியா 29:11-13 - நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எரேமியா 29:11-13

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது எரேமியா 29:11-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

3 நாட்களில்

அனுதின வாழ்க்கையில் நமது மனதின் உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் ஆன்மீகப் போர்களை சமாளிப்பது என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு தொடர்ச்சியான பயணமாகும். அது சுய விருப்பத்துடன் செயல்படும் மல்யுத்தமாக இருந்தாலும், தன்னிறைவுக்கான சோதனையாக இருந்தாலும் அல்லது பரிபூரணத்தின் சுமையாக இருந்தாலும், இந்த சவால்கள் நமது ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கலாம். தேவனுடைய வார்த்தையின் பக்கம் திரும்புவதாலும், நம் விருப்பத்தை தேவனுடைய பாதத்தில் ஒப்படைப்பதாலும், அவருடைய பலத்திற்கான நமது தேவையை அங்கீகரிப்பதன் மூலம், நமது தோல்விகளின் மீது அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்வதால், உண்மையான அமைதியையும் நோக்கத்தையும் நாம் காணலாம். விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் இந்தப் போராட்டங்களை எவ்வாறு வழிநடத்துவது என்பதை ஆராய்வோம்.

ஒரு புதிய ஆரம்பம்   எரேமியா 29:11-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

ஒரு புதிய ஆரம்பம்

4 நாட்களில்

இந்த வேதாகம திட்டம் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனின் தெய்வீக ஆளுமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு பயணத்தை தொடங்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் தேவன் மீது ஆழமான நம்பிக்கையை வைத்து பயத்தை வெல்வதன் மூலம், ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெறுவதன் மூலமும், வாழ்க்கை மேலும் இறுதியான சத்துரு என்னும் மரணத்தின் மீதும் அதன் சக்தியையும் கூட வென்றுவிடலாம். கடினமான காலங்களில் நம்பிக்கையைக் புதுப்பித்தலின் மூலம் தேவனின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உங்களை ஊக்குவிக்கும். புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தோடு கூடிய மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பலத்தோடு எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்போம்.