ரோமர் 6:16-23

ரோமர் 6:16-23 TAOVBSI

மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள். பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

ரோமர் 6:16-23 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 6:16-23

விடுதலையாக வாழ ரோமர் 6:16-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

விடுதலையாக வாழ

10 நாட்களில்

கிறிஸ்துவில் சுதந்திரம்: ஒரு புதிய தொடக்கம் கிறிஸ்துவில் நமக்குள்ள சுதந்திரம் என்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல, அது நம் வாழ்வை மாற்றும் உன்னத உண்மை. ரோமர் 6-ன் படி, இயேசுவின் பலியால் நாம் பாவத்திலிருந்தும் சட்ட திட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, கிருபையினால் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளோம். "விடுதலையாக வாழ" என்னும் இந்தப் புத்தகம், இந்தச் சுதந்திரத்தை அன்றாட வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை விளக்குகிறது. இது உங்கள் உறவுகள் மற்றும் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, நீதியுடனும் அன்புடனும் வாழ உங்களை வழிநடத்தும். இயேசு வாக்களித்த முழுமையான வாழ்வை அனுபவிக்க உங்களை அழைக்கும் ஒரு எளிய வழிகாட்டி இது