மத்தேயு 26:43-46

மத்தேயு 26:43-46 TAOVBSI

அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் பண்ணினார். பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 26:43-46

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல் மத்தேயு 26:43-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

5 நாட்கள்

நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிறோம். நீங்கள் நேரம் எடுத்து கர்த்தருடன் பேசவும் உங்களுக்கான அவரது சித்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் உங்கள் வாழ்வை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும் இந்த வேதபாடத்திட்டம் உங்களுக்கு உதவும். நிகழ்ச்சிகள் நடக்கும் வரை நீங்கள் ஜெபிக்கவும் உற்சாகப்படுத்தப் போகின்றது.