உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
வாசிக்கவும் லூக்கா 6
கேளுங்கள் லூக்கா 6
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 6:30-38
5 நாட்கள்
எது உண்மையான மன்னிப்பு? நாம் எவ்விதம் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதை அறிவதன் மூலம், மன்னிப்பை புரிந்துகொள்ளலாம். இதன் உதவியுடன் கோபம், துரோகம், காயங்கள் போன்ற உணர்ச்சிகளில் இருந்து விடுபட்டு இரக்கமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
28 நாட்கள்
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
29 நாட்கள்
இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை உயிர்த்தெழுதல் வரை லூக்கா சொல்லும் நற்செய்தியை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்; உலகை மாற்றிய தனது போதனைகளையும் லூக்கா மீண்டும் கூறுகிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் லூக்கா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்