யோவான் 3:16-20

யோவான் 3:16-20 TAOVBSI

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 3:16-20

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1     -சகோதரன் சித்தார்த்தன் யோவான் 3:16-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

AIRBUS A330 - விமானத்தில் நாம் யாவருமே- ”இப்பொழுதும், எப்பொழுதும் - பயணித்துக்கொண்டிருக்கிறோம்” என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நாம் வாழும் புவியைத்தான் சொல்கின்றேன். இப்பொழுது பூமி தன்னைதான் சுற்றும் வேகம் ஒருமணி நேரத்திற்கு-1600கி.மீ. பூமியின் எடை 60 ட்ரில்லியன் டன். இந்த பருப்பொருள் -தினமும் 520 இலட்சம் கி.மீ. பயணிக்கின்றது. இதில் விசேஷம் என்னவென்றால், இதன்வேகம் சீராக – எப்பொழுதும் இருக்கின்றது என்பது தான். ஏனென்றால் இது பயணிக்கும் வேகம் குறைந்தாலும் பிரச்சினை; கூடினாலும் நமக்கு பிரச்சினை என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த கனமான பருப்பொருள் பயணிக்க எரிசக்தியை-தொடர்ந்து தருவது எது? ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் .... பூமியை சிருஷ்டித்தார் என்ற - வாக்குமாறாத - தேவனுடைய - வார்த்தை தான். பரிசுத்த வேதாகமத்தில்- தேவன் தமது ” வார்த்தை யினால்” என்ன அற்புதங்களை - நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றார்- என்பதை நாம் காணும் போது - நம்முடைய விசுவாசம் நிச்சயம் பெலப்படும். (வி)சுவாசிக்க வாங்க! ________________________________________