நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
வாசிக்கவும் 2 கொரிந்தியர் 1
கேளுங்கள் 2 கொரிந்தியர் 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 1:3-8
3 நாட்களில்
இன்று நீங்கள் போராடும் பகுதி, நாளை கடவுள் உங்களைப் பயன்படுத்துவார். மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கு கடவுளுடனும் அவருடைய வார்த்தையுடனும், கடவுள் ஏன் நம் வாழ்வில் வலியையும் துன்பத்தையும் அனுமதிக்கிறார் என்பதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வலியின் பின்னால் மறைந்திருக்கும் திட்டங்களைக் கண்டறியுங்கள்.
4 Days
Suffering is a fundamental part of the Christian faith (2 Timothy 3:12), and your godly response to it grows through encountering God and meditating on His Word. The following verses, when memorized, can encourage you toward a godly response to suffering.
5 Days
In this journey through the Book of 2 Corinthians, All Things New explores Paul's theology of adventurous faith in this world and God's call for us to be bold. Kelly Minter helps us understand how the Christian walk may seem contrary to our natural tendencies, but it proves to be infinitely and eternally better. In this 5-day reading plan, you'll explore issues such as: how to deal with difficult relationships, trusting God with your reputation, grounding your identity in Christ, understanding the purpose of suffering and God's provision in it, and how we are to be gospel lights in the world.
7 Days
Depression can affect anyone of any age for any number of reasons. This seven-day plan will guide you to the Counselor. Quiet your mind and heart as you read the Bible and you will discover peace, strength, and everlasting love. For more content, check out finds.life.church.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்