நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
வாசிக்கவும் 1 யோவான் 4
கேளுங்கள் 1 யோவான் 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 யோவான் 4:10-21
5 நாட்கள்
சிறந்த காலங்களில் நம் உலகமானது உறுதி இல்லாத, தலைகீழானதாகத் தோன்றுகிறது. தேவ குமாரனாகிய இயேசு மட்டும் இல்லை என்றால், நமக்கு நம்பிக்கையே இருந்திருக்காது. ஒவ்வொரு கிறிஸ்து பிறப்புத் திருநாளும் - இம்மானுவேல் - தேவன் நம்முடன், என்னும் பரிசை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடன் தேவன் இருக்கிறார் என்ற பரிசு தான் நமக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போதில் இருந்து நித்திய காலம் வரை, நாம் ஒரு போதும் தனிமையாக இல்லை. இது கொண்டாடுவதற்கு ஏற்ற காரணம் தான்.
5 Days
So often, the holidays come and go before we have a chance to focus on preparing our hearts for Christmas. Advent is our way of remembering that God came to be with us, is still with us, and will come again. Over the next 5 days, we’ll examine the four Advent themes: hope, peace, love, and joy.
5 நாட்களில்
வாலண்டைன் தினம் விடியும்போது, உண்மையான அன்பு, தியாகம் மற்றும் எதிர்பார்ப்புகளின் ஒருங்கிணைந்த சிந்தையை வெளிப்படுத்துகிறது. இதயத்தின் விஷயங்களில் நாம் செய்யும் தேர்வுகளைச் சுற்றியுள்ள வேதாகமம் ஞானத்தைப் பற்றி சிந்திப்பது மிக முக்கியமானது. தேவனுடைய வார்த்தையில் தொகுக்கப்பட்ட காலமற்ற கொள்கைகளை நாம் அறிந்து கொள்ள முயல்வோம்.
6 Days
Once, a man predicted His own death. He also predicted He’d only be dead for three days. And He was right! Jesus’ death and return to life are the amazing truths of the Easter story. Christians still celebrate the day. But what does it all mean for you? This Bible Plan will help you understand the mysteries and the beauty of Easter!
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்