1 யோவான் 3:18-24

1 யோவான் 3:18-24 TAOVBSI

என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 யோவான் 3:18-24

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்:  இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல்  ஆகும் 1 யோவான் 3:18-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்: இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல் ஆகும்

4 நாட்கள்

வாழ்க்கையில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பாரம்பரியங்களை அல்லது பழக்க வழக்கங்களை நடைமுறைக் கொள்வதில் நாம் உற்சாகத்துடனும் பிறரை மகிழ்விப்பதில் ஞானத்துடனும் நடந்து கொள்வது அவசியம். மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை நண்பர்களுடன் வளர்ப்பது அவர்கள் மேலுள்ள நமதுஅன்பைக் காட்டுகிறது. . மற்றவர்களுடைய இரட்சிப்பின் மேலும் நமது நீங்காத பாரத்தையும் அவர்களுக்காக ஜெபிக்கும் ஜெபவாஞ்சையையும் ஏற்படுத்துகிறது.