சங்கீத புத்தகம் 40:1-5

சங்கீத புத்தகம் 40:1-5 TAERV

கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார். அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார். அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார். சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார். என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார். என் பாதங்களை உறுதியாக்கினார். தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலை கர்த்தர் என் வாயில் வைத்தார். எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள். அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள். ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்! எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்! கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை! நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும், மீண்டும் கூறுவேன். அவை எண்ணிலடங்காதவை.