கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்! அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது! கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும். கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார். கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார். அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார். அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் வாழ ஒரு இடம் தேடினார்கள். ஆனால் அவர்களால் ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி, சோர்வடைந்து போனார்கள். எனவே அவர்கள் உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர் அவர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்டார். தேவன் அந்த ஜனங்களை அவர்கள் வாழவிருக்கும் நகரத்திற்கு நேராக நடத்தினார். அவர் ஜனங்களுக்காகச் செய்த வியக்கத்தகு காரியங்களுக்காகவும் அவரது அன்பிற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார். பசியுள்ள ஆத்துமாவை நன்மைகளால் தேவன் நிரப்புகிறார்.
வாசிக்கவும் சங்கீத புத்தகம் 107
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: சங்கீத புத்தகம் 107:1-9
6 Days
Who is God? We all have different answers, but how do we know what’s true? No matter what your experiences with God, Christians, or church have been like, it’s time to discover God for who He really is—real, present, and ready to meet you right where you are. Take the first step in this 6-day Bible Plan accompanying Pastor Craig Groeschel’s message series, God Is _______.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்