பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:4-6

பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:4-6 TAERV

எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள். நீங்கள் சாந்தமும் கருணையும் கொண்டவர்கள் என்பதை மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். கர்த்தர் விரைவில் வருவார். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:4-6

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது? பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:4-6 பரிசுத்த பைபிள்

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?

7 நாட்கள்

பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.