மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:19-24

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:19-24 TAERV

“உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். “உடலுக்கு ஒளி தருவது கண். உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியுடன் திகழும். ஆனால், உங்கள் கண்கள் கெட்டுப் போனால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியிழந்து போகும். உங்களிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்விருள் எவ்வளவு கொடியதாயிருக்கும். “எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:19-24

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:19-24 பரிசுத்த பைபிள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

3 நாட்களில்

கவனச்சிதறல்கள் மற்றும் சவால்கள் நிறைந்த உலகில், நோக்கமுள்ள மற்றும் உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ நம் இதயங்களைக் காப்பது அவசியம். பொதுவாக பயம், முறுமுறுத்தல், நண்பர்களின் அழுத்தம் மற்றும் ஏதோ ஒன்றில் மனநிறைவு இவற்றைத் தாண்டி வேதத்தில் வேரூன்றிய நடைமுறை பாடங்களை அறிய நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும். பொதுவாக விசுவாசிகள் வாழ்க்கையின் சோதனைகளை மேற்கொள்ளவும் வெற்றியுடன் வழிநடத்தவும், அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தேவனின் விருப்பத்துடன் அவர்களின் இதயங்களைச் சீரமைக்கவும் தேவன் வாஞ்சிக்கிறார். இதற்காக உதவும் நுண்ணறிவு மற்றும் செயல்படக்கூடிய படிகளை நாம் அறியவும் நன்றியுணர்வை வளர்ப்பதற்கும், உறுதியாக நிற்பதற்கும், அவருடைய மகிமைக்காக தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் ஒன்றாகப் பயணிப்போம்.