கர்த்தர் சீயோன் குமாரத்தியை ஒரு மேகத்தின் கீழ் எவ்வாறு மூடி வைத்திருக்கிறார் என்பதை பார். அவர் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமிக்கு எறிந்திருக்கிறார். கர்த்தர் அவரது கோப நாளில் இஸ்ரவேல் அவரது பாதபீடம் என்பதை தன் மனதில் வைக்கவில்லை. கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார். அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார். அவர் அவரது கோபத்தில் யூதா குமாரத்தியின் கோட்டைகளை அழித்தார். கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும் அதன் ராஜாக்களையும் தரையில் தூக்கி எறிந்தார். அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார். கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார். அவர் தனது வலது கையை இஸ்ரவேலிலிருந்து எடுத்தார். பகைவர்கள் வந்தபோது அவர் இதனைச் செய்தார். அவர் யாக்கோபில் அக்கினி ஜூவாலைப் போல் எரிந்தார். அவர் சுற்றிலும் உள்ளவற்றை எரிக்கிற நெருப்பைப் போன்று இருந்தார். கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார். அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார். அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார். கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார். கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார். அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார். கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார். அவர் இஸ்ரவேலை விழுங்கியிருக்கிறார். அவர் அவளது அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார். அவர் அவளது கோட்டைகளையெல்லாம் விழுங்கினார். அவர் யூதா குமாரத்தியின் மரித்த ஜனங்களுக்காக மிகவும் துக்கமும் அழுகையும் உண்டாக்கினார். கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை ஒரு தோட்டத்தின் செடிகளைப் பிடுங்குவதைப் போன்று பிடுங்கிப்போட்டார். ஜனங்கள் போய் கூடி அவரை தொழுவதற்காக இருந்த இடத்தை அவர் அழித்திருந்தார். கர்த்தர் சீயோனில் சிறப்பு சபைக் கூட்டங்களையும், ஓய்வு நாட்களையும் மறக்கப்பண்ணினார். கர்த்தர் ராஜா மற்றும் ஆசாரியர்களை நிராகரித்தார். அவர் கோபங்கொண்டு அவர்களை நிராகரித்தார்.
வாசிக்கவும் எரேமியாவின் புலம்பல் 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எரேமியாவின் புலம்பல் 2:1-6
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்