யோபுடைய சரித்திரம் 19:21-27

யோபுடைய சரித்திரம் 19:21-27 TAERV

“என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்! எனக்கு இரங்குங்கள்! ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார். தேவன் செய்வதைப் போன்று நீங்கள் ஏன் என்னைத் தண்டிக்கிறீர்கள்? என்னைத் துன்புறுத்துவதால் நீங்கள் தளர்ந்துப் போகவில்லையா? “நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா? என விரும்புகிறேன். என் வார்த்தைகள் ஒரு சுருளில் எழுதப்படாதா? என விரும்புகிறேன். நான் சொல்பவை என்றென்றும் நிலைக்கும்படி ஈயத்தின்மேல் ஒரு இரும்புக் கருவியால் பொறிக்கப்படவோ அல்லது பாறையில் செதுக்கப்படவோ வேண்டுமென விரும்புகிறேன். என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்! முடிவில் அவர் பூமியின்மேல் எழுந்து நின்று என்னைக் காப்பாற்றுவார்! நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும், பின்பு நான் என் தேவனைக் காண்பேன் என அறிவேன்! என் சொந்த கண்களால் நான் தேவனைக் காண்பேன்! நானே, வேறெவருமல்ல, தேவனைக் காண்பேன்! நான் எத்தனை உணர்ச்சிவசப்பட்டவனாக உணருகிறேன் என்பதை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது.

யோபுடைய சரித்திரம் 19:21-27 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்