எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 5:18-23

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 5:18-23 TAERV

“ஆனால் அந்தப் பயங்கரமான நாட்கள் வரும்போது யூதாவே, நான் உன்னை முழுவதுமாக அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “யூதாவிலுள்ள ஜனங்கள் உன்னிடம், ‘நமது தேவனாகிய கர்த்தர் இந்தத் தீயச்செயல்களை நமக்கு ஏன் செய்திருக்கிறார்?’ என்று கேட்டால், நீ அவர்களிடம், ‘யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரை விட்டு விலகினீர்கள். உங்கள் சொந்த நாட்டில், அந்நிய நாட்டு விக்கிரகங்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அச்செயல்களைச் செய்தபடியால், இப்பொழுதும், உங்களுக்கு சொந்தமில்லாத நாட்டில் அந்நியருக்கு சேவைசெய்வீர்கள்’” என்று சொல். கர்த்தர் என்னிடம், “யாக்கோபின் குடும்பத்தாரையும், யூதா நாட்டினரையும் நோக்கி: நீங்கள் மதிகேடர்கள், உங்களுக்குக் கண்கள் இருக்கின்றன, ஆனால் நீங்கள் பார்க்கிறதில்லை! உங்களுக்குக் காதுகள் இருக்கின்றன ஆனால் நீங்கள் கேட்கிறதில்லை! நிச்சயமாக நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள்” என சொல் என்றார். “எனக்கு முன்னால் நீங்கள் பயத்தால் நடுங்கவேண்டும். கடலுக்குக் கரைகளை எல்லையாக உண்டாக்கியவர் நானே. இந்த வழியில் என்றென்றைக்கும் தண்ணீரானது அதனுடைய இடத்தில் இருக்குமாறு செய்தேன். கரையை அலைகள் தாக்கலாம். ஆனால் அவை அதனை அழிக்க முடியாது. அலைகள் இரைந்துக்கொண்டு வரலாம். ஆனால் அது கரையைக் கடந்து போக முடியாது. மறுபடியும் யூதாவின் ஜனங்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனக்கு எதிராகத் திரும்ப அவர்கள் எப்பொழுதும் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து திரும்பி என்னை விட்டு விலகிவிட்டார்கள்.

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 5:18-23 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்