கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 12:7-9

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 12:7-9 TAERV

எனக்குக் காட்டப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. வேதனை மிக்க ஒரு பிரச்சனை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (மாம்சத்தில் ஒரு முள் என்பது அதன் பொருள்) அது சாத்தானிடம் இருந்து அனுப்பப்பட்ட தூதுவன். நான் அதிக அளவு பெருமை பாராட்டிக்கொள்வதில் இருந்து அது என்னை அடித்துக் கட்டுப்படுத்தும். அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 12:7-9

மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 12:7-9 பரிசுத்த பைபிள்

மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்

7 நாட்கள்

உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்கிறாயா? உன்னை பற்றி நினைக்கவோ கண்டுகொள்ளவோ யாருமில்லை என்று உன் உள்ளத்தில் தோன்றுகிறதா? நீ வாழ்க்கையில் தோற்றுப்போனதாக எண்ணுகிறாயா? நீ என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிவதுபோல் இருக்கிறதா? எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லையா? அல்லது தாமதமாகிறதா? இனி நான் வாழ இயலுமா அல்லது வாழ்ந்து என்ன அர்த்தம் என்று யோசிக்கிறாயா? இந்த திட்டம் உனக்கானது. ஆம் அன்பரே நான் குறிப்பிட்ட அனைத்தும் மன அழுத்தத்தின் (depression) விளைவுகள். ஆண்டவர் இயேசு ஒருவரால் மட்டுமே இந்த மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு பரிபூரண விடுதலை அளிக்க முடியும். மேலும் அவர் உங்களுக்கு விடுதலை அளித்து உங்களை மேன்மையாக வைக்க ஆவலாய் இருக்கிறார். வாருங்கள் வேதாகமத்தின் அடிப்படையில் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகளை ஆராய்வோம்.