மத்தேயு 6:19-24

மத்தேயு 6:19-24 TCV

“நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் உடைத்துத் திருடுவார்கள். ஆனால் உங்களுடையச் செல்வத்தைப் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடரும் உடைத்துத் திருடமாட்டார்கள். ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும். “கண் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண் நல்லதாய் இருந்தால், உன் முழு உடலும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும். ஆனால் உன் கண் கெட்டதாயிருந்தால், உன் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உன்னில் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு பெரியதாயிருக்கும்! “எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 6:19-24

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல் மத்தேயு 6:19-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

3 நாட்களில்

கவனச்சிதறல்கள் மற்றும் சவால்கள் நிறைந்த உலகில், நோக்கமுள்ள மற்றும் உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ நம் இதயங்களைக் காப்பது அவசியம். பொதுவாக பயம், முறுமுறுத்தல், நண்பர்களின் அழுத்தம் மற்றும் ஏதோ ஒன்றில் மனநிறைவு இவற்றைத் தாண்டி வேதத்தில் வேரூன்றிய நடைமுறை பாடங்களை அறிய நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும். பொதுவாக விசுவாசிகள் வாழ்க்கையின் சோதனைகளை மேற்கொள்ளவும் வெற்றியுடன் வழிநடத்தவும், அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தேவனின் விருப்பத்துடன் அவர்களின் இதயங்களைச் சீரமைக்கவும் தேவன் வாஞ்சிக்கிறார். இதற்காக உதவும் நுண்ணறிவு மற்றும் செயல்படக்கூடிய படிகளை நாம் அறியவும் நன்றியுணர்வை வளர்ப்பதற்கும், உறுதியாக நிற்பதற்கும், அவருடைய மகிமைக்காக தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் ஒன்றாகப் பயணிப்போம்.