கலா 4:6-8

கலா 4:6-8 க்கான வசனப் படம்

கலா 4:6-8 - மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார். ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய்.

நீங்கள் தேவனை அறியாமல் இருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களாக இல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தீர்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த கலா 4:6-8

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது  கலா 4:6-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது

5 நாட்கள்

தேவாதி தேவனுடன் அமைதியான நேரத்தை செலவிடுவது மிக முக்கியம். சங்கீதம் 46:10-“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்”. இதனால் அமைதியாக இருக்கவும், தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கவும் முடிகிறது. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” ஜெபிப்பதற்காக ஒரு தனிப்பட்ட இடத்திற்கு வரும்படி இயேசு நம்மை ஊக்குவிக்கிறார். இவ்வித அமைதியின் மூலம், நமது ஆற்றல் அளவினை அதிகரிப்பதை மட்டுமின்றி உடல் மற்றும் மனதினையும் சீரமைத்துக் கொள்ள முடியும்.