அவர்கள் தயாரிக்க வேண்டிய ஆடைகள்: ஒரு மார்பணி, ஒரு ஏபோத், ஒரு மேலங்கி, ஒரு நெய்யப்பட்ட உள்ளங்கி, ஒரு தலைப்பாகை, ஒரு இடைப்பட்டி ஆகியவையே. உன் சகோதரன் ஆரோனும், அவன் மகன்மாரும் எனக்கு மதகுருக்களாக ஊழியம் செய்யும்படி, இந்த பரிசுத்த ஆடைகளை அவர்கள் தயாரிக்க வேண்டும்.