“விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு. இறைபிரசன்னக் கூடாரத்தில், சாட்சிப் பெட்டியின் முன்னால் இருக்கும் திரைச்சீலைக்கு வெளியே, ஆரோனும் அவன் மகன்மாரும் அந்த விளக்குகளை மாலை தொடக்கம் விடியும்வரை கர்த்தருக்கு முன்னால் எரிந்து கொண்டிருக்கும்படி செய்யவேண்டும். இது தலைமுறை தோறும் இஸ்ரயேலர் மத்தியில் நிரந்தர நியமமாய் இருக்கும்.