“அதே இரவில் நான் எகிப்து நாடெங்கும் சென்று, அங்குள்ள மக்களதும் மிருகங்களினதும் முதற்பேறுகளை அழிப்பேன். மேலும், எகிப்திய தெய்வங்கள் அனைத்தின்மீதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். நானே கர்த்தர். நீங்கள் வசிக்கும் வீடுகளின்மீதுள்ள இந்த இரத்தம் உங்களுக்கான ஒரு அடையாளமாய் இருக்கும். நான் அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்து செல்வேன்; நான் எகிப்தை அழிக்கும்போது, அழிவின் வாதை எதுவும் உங்களைத் தொட மாட்டாது.