“நாட்கள் வருகின்றன” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
“அப்போது அறுவடை செய்கின்றவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்.
நடுகிறவனை திராட்சைப்பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான்.
மலைகளிலிருந்து புது திராட்சைரசம்
வடிந்து எல்லாக் குன்றுகளின்மீதும் ஓடும்,
நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருவேன்.