1
ஒபதியா 1:17
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஆனால் சீயோன் மலைமீதினிலே மீட்பு இருக்கும், அது பரிசுத்த இடமாயிருக்கும். யாக்கோபின் மக்கள், தம்மை ஆக்கிரமித்தோரிடமிருந்து தமக்குரியதை மீண்டும் உரிமையாக்கிக் கொள்வார்கள்.
ஒப்பீடு
ஒபதியா 1:17 ஆராயுங்கள்
2
ஒபதியா 1:15
“ஏனெனில், அனைத்து நாட்டு மக்களுக்குமான கர்த்தரின் அந்தநாள், சமீபத்தில் வந்துவிட்டது. நீ செய்ததே உனக்கும் செய்யப்படும். உனது செயலுக்கு உரிய பலன் உனது தலையில் வந்து விழும்.
ஒபதியா 1:15 ஆராயுங்கள்
3
ஒபதியா 1:3
மலை உச்சிகளில் கோட்டையமைத்து, மலைப் பாறைப் பிளவுகளில் குடியிருப்பதனால், ‘என்னை யாரால் தரையில் வீழ்த்த முடியும்?’ என உனக்கு நீயே சொல்லிக்கொள்பவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை ஏமாற்றி விட்டது!
ஒபதியா 1:3 ஆராயுங்கள்
4
ஒபதியா 1:4
நீ கழுகைப் போல உயரப் பறந்தாலும், நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அங்கிருந்தும் நான் உன்னைக் கீழே தள்ளிவீழ்த்துவேன்” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
ஒபதியா 1:4 ஆராயுங்கள்