கர்த்தர் சொல்வது இதுவே:
“யூதா மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு,
நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை.
அவர்கள் கர்த்தரின் சட்டத்தைப் புறக்கணித்து,
அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள்.
ஏனெனில் அவர்களின் முன்னோர் பின்பற்றிய
பொய்கள் அவர்களை வழிவிலகச் செய்தன.