வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபேசியர் 5:16

தெளிவாக சிந்திக்க போதுமான இடம்

தெளிவாக சிந்திக்க போதுமான இடம்

5 நாட்கள்

எல்லாவற்றையுமே செய்ய வேண்டுமென்று முயற்சிக்கும் காரணத்தால், எந்த விஷயத்திலும் விருப்பம் இல்லாதது போல நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? இந்த வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியவருடன் பற்பலவற்றை ஒரேநேரத்தில் செய்கிறோம். . .நீங்கள் திறமையாளர்தான். ஆனால் சோர்வடைந்துவிடுகிறீர்கள். அத்தகைய நேரத்தில் காற்றோட்டமான ஒரு அறை உங்களுக்கு சிறிது தேவைப்படும். ஒரு சாதாரணமான ஆனால் ஆச்சரியமான வரவேற்பின் மூலம், கர்த்தர் உங்களுடைய அதிவேகத்தை சமாதானம் நிறைந்த ஒன்றால் இறுதியாக மாற்றியமைக்க வழிவகை வழங்குகிறார். இந்த திட்டம் அதை எப்படியென காண்பிக்கும்.

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

6 நாட்கள்

ஒரு நாளில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இல்லை என்று நீங்கள் விரக்தியடைகிறீர்களா? உங்கள் டூ-டூ பட்டியலில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது? சோர்வில் சோர்வடைந்து தேவனுடைய வார்த்தையை உங்கள் நண்பர்களிடமும் குடும்பத்துடனும் செலவழிக்க போதுமான நேரம் இல்லாததா? இவை உலகில் மிகவும் பொதுவான போராட்டங்களாக இருக்கலாம். நல்ல செய்தி என்னவென்றால் நம் காலத்தை நிர்வகிப்பதற்கு தெளிவான நியமங்களை வேதாகம் நமக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் அந்த வேதவாக்கியங்களின் முலம் வெளிப்படுத்தி, இந்த வாழ்க்கையின் மிதமுள்ள நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதற்கான தரமான நடைமுறை ஆலோசனையை உங்களுக்குக் கொடுக்கும்!

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 நாட்கள்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.