YouVersion Logo
Search Icon

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்Sample

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

DAY 4 OF 6

ஆண்டவர் தொடர இருக்கும் காலத்துக்கு நீ அணை போடாதே!

இன்று, எரேமியா 29:11ம் வசனத்திலிருந்து நமது சிறப்புத் தொடரை நாம் தியானிக்கப் போகிறோம்.

வேதாகமம் கூறுகிறது, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11)

கடந்த சில நாட்களாகவே நாம் மீண்டும் மீண்டும் இவ்வசனம் பற்றிப் பார்த்து வருகிறோம்: அது ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்கள் நன்மையானதும், உன் வாழ்வில் நிறைவேறக்கூடியதும் அபரிவிதமான திட்டங்களுமாகும்.

ஆனால் சில நேரங்களில், வாழ்க்கையின் சோதனைகள் உன்னை வேதனையான சூழ்நிலைகளுக்கு இட்டுச் செல்கின்றன. சில சமயங்களில், நோய், அநீதி, திருமண பந்தம் முறிவு அல்லது நீ நேசித்த நபர் நிரந்தரமாய் இல்லாமல் போகுதல் போன்றவற்றினால் மனமடிவடைந்திருக்கலாம்.

சில சமயங்களில், “ஆண்டவரே, நீர் எங்கே இருக்கிறீர்” என்று நீ குழப்பமடையலாம்.

"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" என்று வேதாகமம் சொல்கிறது. (சங்கீதம் 34:19)

ஆண்டவர் ஒரு காற்புள்ளியை வைத்து, இன்னும் தொடரவிருக்கும் காலத்தை நீ நிறுத்திவிட வேண்டாம் என்று இன்று உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.

அவர் உன்னை விடுவிப்பவர். உன் காயம் மற்றும் அதிர்ச்சிக்கான காரணத்தை அவரால் பார்க்க முடியும். உனக்காக ஒரு வழியை உருவாக்க முடியும். உன் முடிவு தீமையாக இராது. சில சமயங்களில் ஆண்டவருடைய திட்டங்களுக்குள் நீ நுழைய உனக்கு உதவும் நோக்கிலும் அவர் உன்னைப் பயன்படுத்தலாம்.

அவர் உன் வாழ்க்கைக்கு ஒரு தொடர் துவக்கத்தை வைத்திருக்கிறார்; அதாவது, "பின்னர் தொடரலாம்" என்ற திட்டத்தை வைத்திருக்கிறார். நீ தொடர்ந்து முன்னேறிச் செல்வாயாக.

உனக்கு ஆறுதல் அளிக்கும் மற்றும் உன்னை நம்பும் ஆண்டவர் ஒருவர் உனக்கு இருக்கிறார்!

About this Plan

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

எரேமியா 29:11, வேதாகமத்தில் நான் அதிகமாக நேசிக்கும் ஒரு வசனம்: "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே". ஒவ்வொரு நாளும், இந்த அற்புதமான வசனத்தின் ஒரு பகுதியை விரிவாகப் படிப்போம், அதிலிருந்து போதனைகள் மற்றும் கொள்கைகளை அறிந்துகொண்டு நமது விசுவாசத்தில் மேலும் வளர்வோம்!

More