ஜர்னலிங்Sample

ஜர்னலிங் கால் நூற்றாண்டு நம்பிக்கை: பதில் ஜெபங்கள் மற்றும் பிரதிபலிப்புகள்
குறிப்பிட்ட ஜெபங்கள் குறிப்பிட்ட பதில்களைக் கொண்டுவருகின்றன. மாற்கு 10:49-52 இல் கர்த்தராகிய இயேசு, பிறவிக்குருடனைக் குணப்படுத்துவதற்கு முன்பே, இரக்கத்திற்காக இயேசுவிடம் அழுது கொண்டிருந்த பார்திமேயு, அவருக்கு நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறாய் என கேட்ட இயேசு அவனிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பார்வையற்றவனும் குறிப்பிட்டான், ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான். அப்போது இயேசு, நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது’ என்றார். (மாற்கு 10:49-52). பார்திமேயுவைப் போலவே, ஜர்னலிங் தேவனுக்கு முன்பாக நாம் செய்யும் ஜெபங்களுக்கு ஒரு தெளிவான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
தேவனின் வாக்குறுதிகளில், சார்ந்து கொண்டு நாங்கள் விடாமுயற்சியுடன் உள்ளூர் சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் ,எனது ஜர்னலிங் மூலம் எங்கள் பயணத்தைப் பின் திரும்பி பிரதிபலிக்கும் போது, தேவனின் அசைக்க முடியாத உண்மையை நான் திட்டவட்டமாக காண்கிறேன். இன்றும் அவருடைய அன்புக்கும், இரக்கங்களுக்கும். வல்லமைக்கும் எங்கள் குடும்பம் சான்றாக நிற்கிறது.
என் சொந்த வாழ்க்கையின் அனுபவத்தில் குடும்பமாக இந்த தேர்வு செய்த ஒரு தீர்மானம் என்ன? கனடாவில் குடியேற வேண்டும் என்ற எங்கள் நீண்டகால கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்கள் தேவனுக்கு எங்கள் ஆசைகளையும் அவர் ஆளுமைக்கு ஒப்புக்கொடுத்தோம். 2001 ஆம் ஆண்டில், என் கணவர் டேவிட் மற்றும் நான், எங்கள் மூன்று டீனேஜ் குழந்தைகளுடன், பரபரப்பான அபுதாபியிலிருந்து தென்னிந்தியாவில் உள்ள இறச்சகுளம் என்ற தொலைதூர கிராமத்திற்கு சென்றோம். புறக்கணிக்கப்பட்ட இந்த சமூகத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியை நிறுவுவதே எங்கள் நோக்கம். தெய்வீக ஏற்பாட்டால் வழிநடத்தப்பட்ட இந்த மாற்றம் சவால்களால் நிரப்பப்பட்டது என்பதற்கு சந்தேகமில்லை..
முழு சரணாகதியில், செப்டம்பர் 11, 2001 அன்று எங்கள் வேலையை விட்டுவிட்டு, அபுதாபியிலிருந்து எங்களுடைய பொருட்களைக் கட்டிக்கொண்டு, தாயகம் திரும்பும் பயணத்தைத் தொடங்கினோம்.
அன்று 2001 ஆம் ஆண்டு எங்கள் பயணத்தை தொடங்கும் முன் நாங்கள் எனது ஜர்னலில் விரிவான ஜெபப் பட்டியலை வடிவமைத்தோம். செய்த பதிவு செய்யப்பட்ட ஜெபப் பட்டியல் இங்கே குறிப்பிடுகிறேன்: நாம் வாழ்க்கையில் குறிப்பிட்டதாக இருப்பது பற்றி நாம் தெளிவாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் தேவன் உங்களுக்கு பதில்களைக் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம். நாம் அவரை மட்டுப்படுத்தினால் அவர் நமக்குஉதவ முடியாது. தேவன் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
முதலாவது எங்களது திறன்கள் மற்றும் அனுபவத்தின் மூலம் கல்வி துறையில் திறம்பட செயல்பட வேண்டும் என்பதே எங்களது முதன்மையான வேண்டுகோள். இறச்சகுளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பிலும் அறிவிலும் கல்வி கற்பிக்கவும், 50 குழந்தைகளுக்கு மழலையர் வகுப்புகள் தொடங்கவும், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும், இதற்காக அர்ப்பணிப்புள்ள, தேவ-பயமுள்ள ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுடன் அன்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றும் திறன் கொண்ட ஊழியர்களை நாங்கள் நாடினோம். ஒரு நேர்மையான அலுவலக உதவியாளர், பொறியாளர்கள், கட்டுமான பணியாளர்கள் மற்றும் ஒரு ஆடிட்டருக்காக நாங்கள் அன்று ஜெபித்ததோடு ஜர்னலில் குறித்துக் கொண்டேன்.
கிராமத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் எங்கள் ஜெபப் பட்டியலில் இருந்தன. எங்கள் பள்ளி திட்டத்தில் இயேசுவை முக்கிய படுத்த வேண்டும், எனவே உள்ளூர் மக்கள் எங்கள் நோக்கத்தை ஆரம்பத்தில் இருந்து புரிந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டும், மேலும் ஒரு விசுவாச
சபையின். ஒரு நல்ல கூட்டுறவு மற்றும் சக விசுவாசிகளிடமிருந்து தொடர்ந்து ஒரு ஐக்கியமான ஆதரவையும் நாங்கள் தேவனிடத்தில் அன்று ஜெபித்ததோடு ஜர்னலில் குறித்துக் கொண்டேன்.
தேவன் எங்களுக்குத் தந்த எங்கள் குழந்தைகளுக்காக, ஒரு கிறிஸ்தவ பள்ளி ஆங்கில வழி கல்வி, மேலும் அவர்கள் இந்த ஊரில் கலாச்சாரம் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் ,அன்பான ஆசிரியர்கள் மற்றும் நல்ல நண்பர்களைக் கொண்ட கிறிஸ்துவின் அன்பு உள்ளடக்கிய அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கான ஒரு எதிர்காலத்தை உருவாக்கும்படியும் நாங்கள் தேவனிடத்தில் அன்று ஜெபித்ததோடு ஜர்னலில் குறித்துக் கொண்டேன்.
அடிப்படை வசதிகளுடன் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை எழுப்ப வேண்டும் என்றும். மனித பலம் அல்லது செல்வாக்கின் மீது ஒருபோதும் சாய்ந்து கொள்ளாமல், தேவனின் அழைப்புக்கு உண்மையாக இருக்கவும், தற்காலிக அசௌகரியங்களை எதிர்கொள்ளும்போது ஜெபித்ததோடு சௌகரியங்கள்மையாக நம்புவதில் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் நாங்கள் விசுவாசத்தை பின்பற்றி, எங்கள் குழந்தைகளுக்கும் பள்ளிக் குடும்பத்துக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.தேவைப்பட்டால்.வரதட்சணை முறையைப் பற்றி அறிந்திருந்த நாங்கள், எங்கள் இரண்டு பெண் மக்களுக்கும் வரதட்சணை சுமை இல்லாமல் திருமணத்திற்கு உறுதியான வாழ்க்கைத் துணைகளைக் கண்டுபிடிக்க ஜெபம் செய்தோம்.கடைசியாக, தேவனுடைய வார்த்தையில் வேரூன்றியபடி எங்களையும் எங்களுக்குரிய எல்லாவற்றையும் அவருடைய பாதங்களில் வைத்து இந்த சேவையில் ஈடுபடத் தொடங்கியதால். தேவனுடைய சர்வாய்ந்த வர்க்கத்தை தினமும் அணிந்து கொண்டு. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென அன்று தேவனிடத்தில் ஜெபித்ததோடு ஜர்னலில் குறித்துக் கொண்டேன்.
இதயம் வஞ்சகமானது (எரேமியா 17:9) என்பதை நினைத்து எச்சரிக்கையாக இருக்க ஜெபித்தோம், இதை நோக்கமாகக் கொண்டு மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடாமல், நிதிப் பொறுப்புணர்வும் தேவனுடைய ஞானத்தில் தொடர்ந்து சார்ந்திருப்பதும்,எதிர்காலத்திற்கான திட்டவட்டமான இலக்குகளுடன் தொலைநோக்கு பார்வையுடன், மறைமுக நோக்கங்களைக் கொண்ட மக்களைப் பகுத்தறியும் திறனை பரிசுத்த ஆவியானவர் மற்றும் வேதத்தின் மூலம் நாங்கள் கண்டு கொள்ளவும். தேவைகளின் மத்தியிலும் தொடர்ந்து தேவனின் வழிகாட்டுதலுக்கு தேவனுடன் நமது அமைதியான நேரங்களைப் முக்கியப்படுத்திக் கொண்டு தேவனுடன் ஒரு பரிபூரணமான, தொடர்ச்சியான உறவையும், எதிரியை எதிர்த்து நிற்க எங்கள் குடும்பத்தில் உண்மையான அன்பு நிலை கொள்ள வேண்டும் என நாங்கள் அன்று தேவனிடத்தில் ஜெபித்ததோடு ஜர்னலில் குறித்துக் கொண்டேன்.
எனது சொந்த அனுபவத்தில் ஜர்னலிங் ஒரு ஆறுதலாக மாறியது எனக் கூறலாம். என் விரக்தியின் உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்தவும், தேவனின் பதில்கள் வெளிவருவதைக் காணவும் ஏற்ற ஒரு இடம் ஜர்னலிங்.
Scripture
About this Plan

ஜர்னலிங் என்பது .உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவற்றை எழுதுவது ஆகும்.நாம் மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டத்துடன் போராடினால், ஒரு ஜர்னல் அல்லது ஒரு குறிப்பேடு வைத்திருப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். பிலிப்பியர் 4:6-7 [6] நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். [7] அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.இது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
More
Related Plans

God, I’m Tired: Honest Rest for Exhausted Parents

The Unique Ministry of Motherhood

Transformational Days of Courage for Women

Gems of Motherhood~ Letters to a Mama: 20ish Things I Wish I Knew Before Becoming a Mom

Unshakable Love: 5 Days to Feeling Known, Carried & Cherished by God

The 3 Types of Jealousy (And Why 2 Aren't Sinful)

God Is With Us

Connecting With the Heart of Your Child

The Lord's Prayer
