The Chosen - தமிழில் (பாகம் 1)Sample

நீ ஒரு அற்புதமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!
இயேசு தமது பாதையைக் கடந்த எல்லோர் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆண்டவரின் அற்புதங்களை நம் சொந்த வாழ்வில் அனுபவிக்கவும், பிறருக்கு ஒரு அற்புதமாக இருக்கவும் இவர்களுடைய கதைகளால் நாம் ஊக்குவிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
இதை மனதில் கொண்டுதான் இயேசுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘The Chosen’ என்ற தொடரில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு இந்த வாசிப்புத் திட்டத்தை எழுத வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் எழுந்தது. இந்தத் தொடர், என்னை உட்பட உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களைத் தொட்டு ஊக்கப்படுத்தியுள்ளது.
வரும் நாட்களில், இயேசுவுடன் தொடர்பில் இருந்த வேதாகம கதாபாத்திரங்கள் பலரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ காண்பாய். 'The Chosen' தொடரில் உள்ள மாறுபட்ட மற்றும் நம் வாழ்வோடு சம்பந்தபடுத்திக்கொள்ளக்கூடிய ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உன்னுடன் நேரடியாக பேசுவதைப் போல எழுதியுள்ளேன். வேத வசனத்தின் சில பகுதிகளை நீ படித்து, அதன் மூலம் இந்த நபர்களைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை சற்று ஆழமாக ஆராய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் உறுதுணையாக இருக்கும்.
ஒவ்வொரு தியானத்தின் முடிவிலும் அன்றைய கதாபாத்திரத்தின் வாழ்க்கை சாட்சியை உன்னுடைய வாழ்க்கை சூழ்நிலையோடு பிரதிபலித்து பார்ப்பதற்கும் இந்த மாதம் முழுவதும் இந்த சாட்சிகளை சார்ந்து உன் ஆவிக்குரிய வாழ்வில் உறுதியான முன்னேற்ற படிகள் எடுக்கவும் பொது அழைப்போடு முடிவடைகிறது. ஆண்டவர் உன் வாழ்க்கையில் கிரியை செய்ய விரும்புகிறார், உன் மூலமாக பலரை ஆசீர்வதிக்க உன்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்!
இந்தக் கதைகளைப் படிக்கும் போது உன் இதயம் பேரார்வத்தால் பற்றியெரிய வேண்டும் என்றும், இந்த மாதத்தில் நீ இயேசுவை உணரவும், முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய ஒளியால் பிரகாசிக்கவும் நான் ஜெபிக்கிறேன்.
மறக்க வேண்டாம்: நீ ஒரு அற்புதம்!
- Christian Misch
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
Scripture
About this Plan

நீ ஒரு அற்புதமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்! “The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்!
More
Related Plans

Heaven (Part 1)

Be the Man They Need: Manhood According to the Life of Christ

Made New: Rewriting the Story of Rejection Through God's Truth

Growing Your Faith: A Beginner's Journey

God in 60 Seconds - Fun Fatherhood Moments

Heaven (Part 3)

Kingdom Parenting

Hebrews: The Better Way | Video Devotional

Drawing Closer: An Everyday Guide for Lent
