YouVersion Logo
Search Icon

Plan Info

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுSample

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

DAY 9 OF 14

[IMAGE CONTENT] ## தாலந்துகள் மற்றும் திறன்கள் மூலம் தேவன் பேசுகிறார் மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோகர்த்தர். (நீதிமொழிகள் 16:9) ஜன்ங்கள் அடிக்கடி இப்படி யோசிப்பார்கள், என் வாழ்க்கையை கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்? நான் உயிருடன் இருப்பதன் நோக்கம் என்ன? ஆண்டவரிடம், என்னைப் பற்றி ஏதாவது திட்டம் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு ஆண்டவர் பதிலளிக்கும் ஒரு வழி, நமது இயற்கையான வரங்கள் மற்றும் திறன்கள் மூலமாகும். அவர் நமக்குக் கொடுக்கும் வரங்கள் மற்றும் திறமைகள் மூலம், நம் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள அவர் நம்மை வழிநடத்துகிறார். நாம் "பரிசு" என்று அழைக்கும், தேவன் நமக்கு கொடுத்த திறமை என்பது, நம்மால் எளிதில் செய்யக்கூடிய ஒன்று, அது இயற்கையாகவே நமக்கு வரும் ஒன்று. உதாரணமாக, பல சிறந்த கலைஞர்கள், வடிவங்களையும், வண்ணங்களையும் எவ்வாறு ஒன்றாக இணைப்பது என்பதை அறிந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஓவியம், சிற்பம் அல்லது கட்டிடங்களை வடிவமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். பல பாடலாசிரியர்கள் தங்கள் மனதில் இசையைக் கேட்கிறார்கள், மேலும் அவர்கள் அழகான இசையை உருவாக்குவதற்காக, மெல்லிசை மற்றும் பாடல் வரிகளை எழுதுகிறார்கள். சிலருக்கு காரியங்களை ஒழுங்காக அமைக்க அல்லது நிர்வகிப்பதற்கான, இயல்பான திறன்கள் உள்ளன, மற்றவர்கள் ஆலோசனை தரும் திறனை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு, தங்கள் வாழ்க்கையையும், உறவுகளையும் ஒழுங்கு படுத்த உதவுகிறார்கள். நமது திறமைகள் என்னவாக இருந்தாலும், நாம் இயல்பாகச் செய்வதில் சிறந்து விளங்குவதைச் செய்வதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறோம். உங்கள் வாழ்க்கையில் உங்கள் நோக்கம் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் சிறப்பாகச் செயல்படும் காரியத்தை செய்யுங்கள், பிறகு உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பதன் மூலம் கடவுள் உங்கள் விருப்பங்களை உறுதிப்படுத்துவதைப் பாருங்கள். உங்களுக்குத் திறமை இல்லாததைச் செய்ய உங்கள் வாழ்க்கையை செலவிட வேண்டாம். மக்கள் திறமை இல்லாத வேலைகளில் பணிபுரியும் போது, ​​அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகிறார்கள் - அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் கூட. ஆனால் மக்கள் தங்களுக்குரிய இடங்களில் இருக்கும்போது, ​​அவர்கள் தங்கள் வேலைகளில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளுக்கும், சக ஊழியர்களுக்கும் ஆசீர்வாதமாக இருப்பார்கள். நாம் செய்வதை சிறப்பாகச் செய்தால், நம் முயற்சிகளில் ஆண்டவருடைய அபிஷேகத்தை (பிரசன்னம் மற்றும் வல்லமை) உணர்வோம். நாம் நமது வரங்களில் செயல்படுகிறோம் என்பதையும், அவ்வாறு செய்வது கடவுளை மகிமைப்படுத்துகிறது என்பதையும், அது மற்றவர்களுக்கு வாழ்க்கையைக் கொடுப்பதையும் நாம் அறிவோம். இந்த அபிஷேகத்தின் மூலம் கடவுள் நம்மிடம் பேசுகிறார், நம் வாழ்க்கைக்கான அவருடைய திட்டத்தை நாம் நிறைவேற்றுகிறோம் என்பதை அறிய நமக்கு சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறார். இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: நீங்கள் சிறந்ததைச் செய்யுங்கள் - அது உங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு.

Scripture

Day 8Day 10

About this Plan

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பது

இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்த...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy