YouVersion Logo
Search Icon

உங்களுக்குச் சமாதானம்Sample

உங்களுக்குச் சமாதானம்

DAY 2 OF 5

சமாதானத்தின் எக்காளங்கள்

ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டையம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. ~ ஏசாயா 2:4

அவரது சொந்த ஊரான நியூ ஆர்லியன்ஸில் ஒருஒன்பது வயது சிறுவனின் மரணம், குழந்தைகளின் கைகளிலிருந்துத் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான வழியை உருவாக்க ஷமரைத் தூண்டியது. தன்னுடைய சிறுவயதில் இசை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழஉதவி செய்ததென்பதை நினைவுகூர்ந்தவராய் போலீஸின் உதவியுடன் எவர்களுடைய கைகளிலெல்லாம்துப்பாக்கி இருந்ததோ அவர்களிடமெல்லாம் எக்காளம் என்னும் இசைக்கருவியை கொடுப்பது, இசைப்பாடங்களை வழங்குவது போன்ற சமூக முயற்சியை ஆரம்பித்தார். இவ்வாறு ஆயுதங்களுக்கு பதிலாக இசைக்கருவியை கொடுப்பதால் அங்குள்ள வாலிபர்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களை மேற்கொள்வர் என நம்பினார்.

தேவனும் நம் சமுதாயத்தில்இருக்கிற பல விதமான வன்முறைகள், எதிர்காலத்தில் சமாதானங்களாகமாறநோக்கமுடையவராயிருக்கிறார். அந்த நாளில், “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டையம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை”.(ஏசாயா 2:4). அந்த நாளில்நமக்கு ஆயுதங்கள் தேவை யில்லை. அழிவுக்கேதுவான காரியங்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களாகமாற்றப்படும்.

போர் செய்வதற்குப் பதிலாக நாம் அனைவரும் சேர்ந்து தேவனை ஆராதிக்கலாம். அந்த நாள் மட்டுமாக நாம் ஜெபித்து,நம்முடைய சமுதாயத்துக்கு உதவி, கலங்கியிருக்கிற உள்ளங்களை தேற்றக் கூடிய மருந்தாய் அமைவோம். உலகத்தை நம்மால் மாற்ற முடியாது. அது தேவனாலே மாத்திரம் ஆகும். ஆனால்,நாம் இருக்கும் இடங்கள் சமாதானமான இடங்களாக இருக்கவும், நம்மைப் பார்த்து மற்றவர்களும் “அவருடைய வழியில்” நம்மோடு நடக்கவும், நாம் அழைப்போம்.

சிந்தனைக்கு

ஏசாயாவில் கூறப்பட்டுள்ள எதிர்காலத்தைப் பற்றி நீ எவ்வாறாய் நோக்குகிறாய்? தேவ சமாதானம் உன்னுடைய சமுதாயத்தில் உருவாக நீ எவ்வாறுஉதவுவாய்?

ஜெபம்

பிதாவே, நீர் சமாதானத்தின் ஆசிரியராக இருப்பதற்காக உமக்கு நன்றி. என்னை சுற்றியுள்ளவர்களுக்கு உம்முடைய சமாதானத்தைக் கொடுக்கதயவாய் என்னை உபயோகித்தருளும்.

Scripture

About this Plan

உங்களுக்குச் சமாதானம்

"என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக" - யோவான் 14:27 எங்கள் தியானங்கள் மூலம் இயேசுவின் சமாதானத்தை பற்றி மேலும் இங்கு கற்றுக்கொள்ளுங்கள் : 

More