YouVersion Logo
Search Icon

Plan Info

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

DAY 12 OF 40

இயேசுவின் ராஜ்யம் துன்பப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி, மேலும் தேவனுக்கான தேவையைப் புரிந்துகொள்ளும் அனைவருக்கும் இது திறந்திருக்கும். இதை விளக்குவதற்கு, இயேசு அவருடைய மன்னித்தல், குணப்படுத்துதல் மற்றும் தாராள மனப்பான்மையைப் பெறும் நோயுற்றவர்கள் மற்றும் ஏழைகளுடனும் இரவு விருந்துகளில் கலந்துகொள்வது பற்றி லூக்கா சொல்கிறார். இதற்கு நேர்மாறாக, இயேசு தனது செய்தியை நிராகரித்து, அவருடைய வழிமுறைகளைப் பற்றி விவாதம் பண்ணும் மதத் தலைவர்களுடனும் இரவு விருந்துகளில் கலந்துகொள்கிறார். தேவனுடைய ராஜ்யம் எதைப் பற்றியது என்பது அவர்களுக்குப் புரியவில்லை, எனவே அவர் அவர்களுக்கு ஒரு உவமையைக் கூறுகிறார். இது இப்படி செல்கிறது. இரண்டு குமாரர்களைப் பெற்ற ஒரு தகப்பன் இருக்கிறார். மூத்த குமாரன் நம்பகமானவன், தந்தையை மதிக்கிறான், ஆனால் இளைய குமாரன் ஒரு துன்மார்க்கன். அவன் தனது ஆஸ்தியை ஆரம்பத்தில் பிரித்துக்கொண்டு, வெகுதூரம் பயணம் செய்கிறான், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். பின்னர் ஒரு கொடிய பஞ்சமுண்டாயிற்று, குமாரன் பணமில்லாமல் போகிறான், அதனால் அவனுக்கு வேறொருவரின் பன்றிகளை கவனித்து கொள்ளும் வேலை கிடைக்கிறது. ஒரு நாள் அவன் மிகவும் பசியுடன் இருக்கிறான், அவன் பன்றிகளின் தவிட்டை சாப்பிடத் தயாராக இருக்கிறான், மேலும் தன்னுடைய தகப்பனின் கூலிக்காரரில் ஒருவனாக இருப்பது மேல் என நினைக்கிறான். எனவே அவன் மன்னிப்பு கேட்க ஒத்திகை பார்த்து, வீட்டிற்கு திரும்பிச் செல்கிறான். குமாரன் தொலைவில் வரும்போது, தகப்பன் அவனைப் பார்க்கிறார், அவர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். அவரது குமாரன் உயிருடன் இருக்கிறான்! அவன் பஞ்சத்திலிருந்து தப்பினான்! அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, ஓடி, அவனைக் கட்டிக்கொண்டு, முத்தஞ்செய்தார். குமாரன் தகப்பனை நோக்கி ,"தகப்பனே, உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக வரலாமா...” என்று கூறினான். ஆனால் அவன் முடிப்பதற்குள், தந்தை தன் ஊழியக்காரரை நோக்கி நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள் என்கிறார். அவர்கள் சிறந்த விருந்து தயார் செய்ய வேண்டும், ஏனெனில் அவரது குமாரன் வீட்டிற்கு திரும்பியதை கொண்டாட வேண்டிய நேரம் இது. விருந்து ஆரம்பிக்கும்போது, அவனுடைய மூத்த குமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, இழந்துபோன சகோதரனுக்காக கீதவாத்தியத்தையும் உணவுக் களிப்பையும் கண்டான். அவன் கோபமடைந்து, களிப்பில் சேர மறுக்கிறான். தகப்பன் தனது மூத்த குமாரனை வெளியே பார்த்து, “மகனே, நீ ஏற்கனவே நம் குடும்பத்தில் இருக்கிறாய். என்னிடம் இருப்பது எல்லாம் உன்னுடையது. ஆனால் நாம் உன் சகோதரனைக் கொண்டாட வேண்டியிருந்தது. அவன் தொலைந்து போனான், ஆனால் இப்போது அவன் கண்டுபிடிக்கப்பட்டான். அவன் இறந்துவிட்டான், ஆனால் இப்போது அவன் உயிருடன் இருக்கிறான்.” இந்தக் சம்பவத்தில் , இயேசு மதத் தலைவர்களை மூத்த குமாரனுடன் ஒப்பிடுகிறார். மதத் தலைவர்கள் வெளியாட்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் எவ்வளவு புண்பட்டிருக்கிறார்கள் என்பதை இயேசு காண்கிறார், ஆனால் இயேசு அவரைப் போலவே வெளியாட்களையும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். சமுதாயத்தின் விரட்டியடிக்கப்பட்டவர்கள் தங்கள் தகப்பனிடம் திரும்பி வருகிறார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்! அவர்கள் பயன்படுத்த தேவனின் நன்மை போதுமானது. அவரிடம் உள்ளவை அனைத்தும் அவர் தனதுபுத்திரராக அழைப்பவர்களுக்குச் சொந்தமானது. அவருடைய ராஜ்யத்தை அனுபவிப்பதற்கான ஒரே தேவை தாழ்மையுடன் அதைப் பெறுவதுதான்.
Day 11Day 13

About this Plan

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy