பயத்தை மேற்கொள்ளுதல்Sample

பயத்தை மேற்கொள்ளுதல்.
பயத்தைக் குறித்து அகராதியில்: விரும்பத்தகாத உணர்ச்சியினால் ஏற்படக்கூடிய ஒருவித வலி, ஆபத்து அல்லது தீங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், கிரிக்கெட் வீரர்களை குட்டித் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். மேலும் இவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் சாதிக்க வேண்டிய ஒரு அழுத்தமும், விளையாட்டில் உயர்ந்த நிலைக்கு முன்னேறிச் செல்லுவது போன்ற விஷயங்களும் எப்பொழுதும் நிலைத்துநிற்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரருக்கு உண்மையாக காணப்படும் அழுத்தத்திற்கு அப்பாலும், தொடர்ச்சியாக பலவிதமான பயம் இவர்களை ஆட்கொள்வது ஒரு தொடர் போராட்டமாக கருதப்படுகிறது. தோல்வி என்னும் பயத்தை சந்திக்கிறேன். சிறந்ததை சாதிக்க முடியுமா என்கிற பயமும் மற்றவர்கள் என்னிடத்தில் எதிர்பார்ப்பதும் மற்றும் எனக்கு நானே வைத்துக்கொண்ட எதிர்ப்பார்ப்பும் நிறைவேற்ற முடியுமா என்கிற பயத்தையும் நான் சந்திக்கிறேன். இதுபோன்ற பயத்தை அநுதினமும் அனுபவிக்கிறேன். கர்த்தர் எனக்கு ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிற சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இதுபோன்ற பயங்களை மேற்கொள்வது அவசியம் என்பதனை அதிகளவில் கண்டுகொண்டேன்.
இதை வாசிக்கும் நீங்களும் கூட பலவித பயங்களை சந்திக்கக்கூடும். ஆனால், அவைகளை மேற்கொண்டு வெற்றியுள்ள வாழ்வை நீங்கள் வாழ வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
“பயப்படாதே”, என்று சொல்லி தேவன் தம்முடைய ஜனத்தை மீண்டும் மீண்டுமாக தைரியப்படுத்துகிறார். அப்படியிருந்தும், நாம் பயந்த சுபாவமுள்ள ஜீவிகளாக காணப்படுகிறோம். உபாகமம்.31.8-ல் தேவன் இவ்விதமாக கூறுகிறார்: “...அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்...”. நம்முடைய சூழ்நிலைகள் எதுவாயிருப்பினும், தேவன் நமக்கு வாக்களித்தபடியே, அவர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிந்து சந்தோஷத்தையும், மனமகிழ்ச்சியையும் கண்டுகொள்வது நமக்கு அவசியமாயிருக்கிறது.
Scripture
About this Plan

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜெ.பி.டுமினி, பயத்தை எதிர்கொண்டு மேற்கொள்ளுதல் பற்றிய தன் தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுகிறார். நாம் அவருக்கு பயப்படும் பயத்தை உறுதிப்படுத்துவதற்காக, நம்முடைய உண்மையான மதிப்பையும் தகுதியையும் புரிந்துகொண்டு, சர்வ வல்லமை பொருந்திய சிருஷ்டிகராகிய தேவனை நோக்கிப் பார்ப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
More