YouVersion Logo
Search Icon

Plan Info

இவைகளில் அன்பே பிரதானம்Sample

இவைகளில் அன்பே பிரதானம்

DAY 5 OF 26

மூன்றாவது வகை அன்பு ஸ்டோர்கே (Storgé). இது குடும்பத்தில், பெற்றோர்-பிள்ளைகள் இடையே காணப்படும் அன்பைக் குறிப்பதாகும். இந்த அன்பும் ஒரு வரம்புக்குட்பட்டது. காரணம், நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கையில் இந்த அன்பிலும் சில சமயத்தில் விரிசல் உண்டாகி விடுகிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் புறக்கணிப்பு என்பது எங்கும் காணப்படுகிற ஒரு காரியமாகிவிட்டது. இந்த உலகத்தில் வாழுகிற அனைவரும் எப்போதாவது இந்த புறக்கணிப்பை எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கும் காணப்படுகிற இந்த புறக்கணிப்பு ஒரு மிகப்பெரிய அழிவின் சக்தியாகவும் இருக்கிறது. எந்தவொரு நல்ல குடும்பத்திலும் கூட இது திடிரென தலைதூக்க முடியும். கொஞ்ச காலம் முன்னர் ஒரு கதையை வாசித்தேன். ஒரு தாய்க்கு இரண்டு மகள்கள். அந்த தாய் இருமகள்களில் ஒரு மகளை மட்டும் விசேஷமாக கவனித்தாள். (இதுவும் ஏதோ புதுமையான காரியமல்ல, பழைய ஏற்பாட்டில் ஈசாக்கு – ரெபெக்காள் குடும்பம் பாரபட்சத்திற்கு பிரபலமானது. ஈசாக்கு ஏசாவையும், ரெபெக்காள் யாக்கோபையும் நேசித்தார்கள். இரு பிள்ளைகளையும் ஒரே விதமாய் நேசிக்காமல் போனது தாய் தந்தை செய்த தவறு. அதற்கு அவர்கள் மிகப்பெரிய கிரயம் செலுத்தினார்கள். தான் நேசிக்காத மகனை ஆசீர்வதிக்கிற நிலைக்கு ஈசாக்கு தள்ளப்பட்டான். ஈசாக்கை ஏமாற்றி ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்ட யாக்கோபு, வீட்டைவிட்டு அவசரமாக ஓடிப்போனான். எனவே, சாகும்வரை ரெபெக்காள் யாக்கோபின் முகத்தைக் காண முடியவில்லை). சரி, திரும்ப கதைக்கு வருவோம். ஒரு நாள், அந்த தாய் இருந்த அறைக்கு பக்கத்தில் இருந்த அறையில் இருந்து ஏதோ சத்தம் வந்தது. அந்த அறையில் தான் நேசிக்கும் மகள் இருப்பாளோ என்ற எண்ணத்தில் அந்தத் தாய், “டார்லிங், அது நீயா”? என்று கேட்டார்கள். “இல்லை, நான்தான்” என்று இன்னொரு மகளின் குரல் கேட்டது. அப்போதுதான் அந்த தாயாருக்கு பாரபட்சத்தால் உண்டான தாக்கம் புரிந்தது. மனந்திரும்பினாள். இன்னொரு மகளுடன் இருந்த உறவு சீர்படுத்த முனைந்தால். அன்பும், உணர்வுகளை புரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லாத ஏராளமான இல்லங்களில் இன்றைக்கும் புறக்கணிப்பால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவேதான், தேவனுடைய வார்த்தைகளாகிய சத்திய வசனத்திலிருந்து நான் கொடுக்கும் இந்தப் போதனைகள், புறக்கணிப்பால் உங்களுக்கு ஏற்பட்ட வேதனையிலிருந்து உங்களை விடுதலையாக்கி, நீங்கள் தேவனுடைய அன்பை நாடிச் செல்ல உங்களுக்கு உதவும் என நான் உறுதியாய் நம்புகிறேன். தேவனுடைய குடும்பம்தான் மிகச்சிறந்த குடும்பம் என்பதை இந்த சமயத்தில் நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் சொந்த குடும்பத்தார் உங்களை புறக்கணித்திருந்தாலும், கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவருடைய தயவு உங்கள் மீது இருக்கிறது. அவர் செய்கிற எல்லாவற்றையும் உங்களுக்காகவே பிரத்யேகமாக செய்கிறார் (2 கொரிந்தியர் 4:14)!
Day 4Day 6

About this Plan

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy