சங் 93

93
சங்கீதம் 93
1யெகோவா ஆளுகை செய்கிறார்,
மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து,
அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்;
ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
2உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது;
நீர் என்றென்றும் இருக்கிறீர்.
3யெகோவாவே, நதிகள் எழும்பின;
நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;
நதிகள் அலைதிரண்டு எழும்பின.
4திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட,
கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்;
யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக
உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.

اکنون انتخاب شده:

சங் 93: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید