சங் 138

138
சங்கீதம் 138
தாவீதின் பாடல்.
1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;
தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,
உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;
உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;
என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
4யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
5யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,
அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
6யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,
தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;
என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்;
உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
8யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;
யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;
உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.

اکنون انتخاب شده:

சங் 138: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید