சங் 133

133
சங்கீதம் 133
தாவீதின் ஆரோகண பாடல்.
1இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது
எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
2அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு,
அவனுடைய தாடியிலே வடிகிறதும்,
அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,
3எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது;
அங்கே யெகோவா என்றென்றைக்கும்
ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.

اکنون انتخاب شده:

சங் 133: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید