சங் 108

108
சங்கீதம் 108
தாவீது பாடிய பாடல்.
1தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;
நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்;
என்னுடைய மகிமையும் பாடும்.
2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,
நான் அதிகாலையில் விழிப்பேன்.
3யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும்,
உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,
உமது வலதுகரத்தினால் இரட்சித்து,
எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார்,
ஆகையால் சந்தோஷப்படுவேன்;
சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;
எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன்,
யூதா என்னுடைய செங்கோல்.
9மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்;
ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்;
பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
10வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?
ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ?
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;
மனிதனுடைய உதவி வீண்.
13தேவனாலே வெற்றி பெறுவோம்;
அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.

اکنون انتخاب شده:

சங் 108: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید