YouVersion Logo
Search Icon

நாகூம் 2

2
நினிவேயின் வீழ்ச்சி
1நினிவே பட்டணமே, உன்னை சிதறடிக்கப் போகின்ற எதிரி உனக்கெதிராக முன்னேறி வருகின்றான்;
கோட்டையின் அரண்களில் காவல் புரிவாயாக!
அவன் வரவிருக்கும் வீதிகளைக் கண்காணிப்பாயாக!
போருக்குத் தயாராகி நிற்பாயாக!
உன் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டுவாயாக!
2எதிரிகள் இஸ்ரயேலைப் பாழாக்கி
அவர்களின் திராட்சைக்கொடியின் கிளைகளை அழித்துவிட்டாலும்,
கர்த்தர் இஸ்ரயேலின் மாட்சிமையை,
யாக்கோபின் மாட்சிமையைப் போல் மீண்டும் உருவாக்குகின்றார்.
3சிதறடிக்க வருகின்ற#2:3 சிதறடிக்க வருகின்ற – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது அவரது மாவீரர்களின் கேடயங்கள் செந்நிறமானவை,
படை வீரர்களின் ஆடையோ கருஞ்சிவப்பு.
அவை திரட்டப்படும் நாளிலே,
யுத்த இரதங்களிலுள்ள உலோகங்கள் தீயாய் மினுமினுக்க,
தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகளின் மிரட்டல் காட்சி.
4யுத்த இரதங்கள் நகரின் ஊடாக தலைதெறிக்க விரைந்தோடி,
நகரச் சதுக்கத்தில் இங்கும் அங்கும் திரும்புகின்றன.
அவற்றின் தோற்றம் சுடர்விட்டெரியும் தீப்பந்தம் போன்றது,
அவை மின்னலைப் போல் அங்கும் இங்கும் தெறித்துப் பாய்கின்றன.
5நினிவேயின் அரசன் இராணுவ அதிகாரிகளை அழைப்பிக்கிறான்.
அவர்களுக்கோ, செல்லும் வழியில் கால்கள் இடறுகின்றன.
அவர்கள் பட்டணச் சுவரை நோக்கி விரைகின்றார்கள்,
பாதுகாக்கும் அரண் எழுப்பப்படுகிறது.
6ஆனாலும் ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன.
அரண்மனை சரிந்து வீழ்கின்றது.
7அவளது ஆடை களையப்படுகிறது.
அவள் சிறைப்பிடிக்கப்பட்டு நாடுகடத்தப்படுகின்றாள்.
அவளது பணிப்பெண்கள் ஒப்பாரியிட்டு, மார்பில் அடித்துக்கொண்டு,
புறாக்களைப் போல்
குலுங்கிக்குலுங்கி புலம்புகிறார்கள்.
8நினிவே ஒரு நீர்த்தேக்கம் போலிருந்தாள்,
ஆனால் இப்பொழுது அதிலிருந்த நீர் விலகியோடிப் போவதைப் போலிருக்கின்றது.
“போக வேண்டாம், போக வேண்டாம்” என கதறுகிறார்கள்;
ஆனால் திரும்பி வருவோர்#2:8 திரும்பி வருவோர் – நினிவேயின் இராணுவ வீரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து தப்பியோடுவதைக் குறிக்கலாம் ஒருவருமில்லை.
9நினிவேயை கைப்பற்றுவோர்,
“வெள்ளியைக் கொள்ளையிடுங்கள்,
தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்.
எல்லாவித அருமையான பொருட்களின் செல்வமுண்டு,
பட்டணத்தில் உள்ள பொக்கிஷங்கள் அளவற்றவை” என்கிறார்கள்.
10நினிவே, பாழாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு,
ஆடை களையப்பட்ட பட்டணமானாள்! உள்ளங்கள் திகிலால் கரைந்து போயின,
முழங்கால்கள் உயிரிழந்தன, அடிவயிறுகள் கலங்கின,
முகங்கள் யாவும் வெளிறிப் போயின.
11சிங்கங்களின் குகைக்கு#2:11 சிங்கங்களின் குகைக்கு – அசீரிய இராச்சியமும் நினிவே பட்டணமும் என்னவாயிற்று?
சிங்கக்குட்டிகள் இரை உண்ட இடம் எங்கே?
ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் குட்டிகளுடன் பயமின்றி சென்று திரிந்த
அந்த இடம் எங்கே?
12சிங்கம் தனது குட்டிகளுக்குத் தேவையான இரையைக் கொன்று,
தன் துணைவிக்கும் இரையை நெரித்து பிடித்துச் சென்ற இடமன்றோ அது!
முன்னர், சிங்கம் தன் இருப்பிடத்தை தான் கொன்றவற்றால் நிரப்பிற்று,
தன் குகையை தனது இரையால் நிரப்பிற்று.
13நினிவேயே, “இதோ, நான் உனக்கு விரோதமாக இருக்கின்றேன்”
என்று சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.
“இதோ உனது யுத்த இரதங்களை எரித்து, புகை எழுமாறு செய்வேன்.
வாளானது உனது இளம் சிங்கங்களைக்#2:13 இளம் சிங்கங்களைக் – அசீரிய போர்வீரர்களை குறிக்கின்றது கொன்றழிக்கும்.
பூமியில் உங்களுக்கு இரையில்லாமல் போகச் செய்வேன்.
உனது தூதுவர்களின்#2:13 தூதுவர்களின் – அசீரிய அரச தூதுவர்களை குறிக்கின்றது மிரட்டும்#2:13 மிரட்டும் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது குரல்கள்
இனிமேலும் கேட்கப் போவதில்லை.”

Currently Selected:

நாகூம் 2: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in