ஓசியா 14
14
மனந்திரும்புதலின் ஆசீர்வாதம்
1இஸ்ரயேலே, உன் இறைவனாகிய கர்த்தரிடம் திரும்பு;
உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன.
2நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன்
கர்த்தரிடம் திரும்புங்கள்;
நீங்கள் அவரிடம்,
“எங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்திடுவீராக,
எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்வீராக;
அப்போது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை
காளைகளின் பலியாய் செலுத்துவோம்” என மன்றாடுங்கள்.
3“அசீரியா நாடு எங்களைக் காப்பாற்ற மாட்டாது;
நாங்கள் போர்க்குதிரைகளில் ஏற மாட்டோம்.
எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை
‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்ல மாட்டோம்;
ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள்” என்று கூறுங்கள்.
4நான் அவர்களுடைய வழிவிலகலைக் குணமாக்குவேன்,
நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன்,
எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
5நான் இஸ்ரயேலுக்குப் பனி போல் இருப்பேன்;
அவன் லில்லியைப் போல் பூப்பான்.
லெபனோனின் கேதுரு மரங்கள் போன்று
உறுதியாய் வேரூன்றி நிற்பான்.
6அவனுடைய இளம் தளிர்கள் வளரும்.
அவனுடைய புகழ் ஒலிவ மரத்தைப் போலவும்,
அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு மரங்கள் போலவும் இருக்கும்.
7மக்கள் என்னுடைய நிழலில் மீண்டும் குடியிருப்பார்கள்;
அவர்கள் தானியத்தைப் போல் செழிப்பார்கள்.
திராட்சைக்கொடியைப் போல் பூப்பார்கள்;
அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சைரசம் போல் இருக்கும்.
8எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனிமேலும் வேலை இல்லை;
நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன்.
நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன்.
அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன.
9ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான்.
பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான்.
கர்த்தரின் வழிகள் நீதியானவை;
நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள்,
ஆனால் கலகக்காரர்களோ அவைகளில் இடறி விழுகிறார்கள்.
Currently Selected:
ஓசியா 14: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.