யாத்திராகமம் 6
6
1அப்போது கர்த்தர் மோசேயிடம், “இப்போது நான் பார்வோனுக்குச் செய்யபோகும் காரியத்தை நீ காண்பாய். என் வல்லமையான கரத்தின் பொருட்டு, அவன் இஸ்ரயேலரைப் போகவிடுவான்; என் வல்லமையான கரத்தின் பொருட்டு, அவன் அவர்களைத் தன் நாட்டிலிருந்து துரத்தி விடுவான்” என்றார்.
2மேலும் இறைவன் மோசேயிடம், “நானே கர்த்தர். 3ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் சர்வ வல்லமை கொண்ட இறைவனாக#6:3 சர்வ வல்லமை கொண்ட இறைவனாக – எபிரேய மொழியில் எல்-ஷடாய் நான் காட்சியளித்தேன். ஆனாலும் கர்த்தர் என்ற என் பெயரால் நான் அவர்களுக்கு என்னை அறியப்படுத்தவில்லை. 4இஸ்ரயேல் மக்கள் அந்நியராய் வாழ்ந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடன் ஒரு உடன்படிக்கையையும் ஏற்படுத்தினேன். 5மேலும், எகிப்தியரால் அடிமைப்படுத்தப்படுகின்ற இஸ்ரயேலரின் புலம்பலைக் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைவிற்கொண்டேன்.
6“ஆகையால், நீ இஸ்ரயேல் மக்களிடம் போய்ச் சொல்ல வேண்டியதாவது; ‘நானே கர்த்தர், நான் எகிப்தியரின் கடினமான வேலையிலிருந்து#6:6 கடினமான வேலையிலிருந்து அல்லது நுகத்தின் கீழிருந்து உங்களை வெளியே கொண்டுவருவேன். நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து உங்களை விடுதலையாக்குவேன்; நான் பலத்த கரத்தினாலும், தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களினாலும் உங்களை மீட்பேன். 7உங்களை என் சொந்த மக்களாக்கி, நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்போது எகிப்திய நுகத்தின் கீழிருந்து, உங்களை விடுவித்த உங்கள் இறைவனாகிய கர்த்தர் நானே என்று அறிந்துகொள்வீர்கள். 8ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று, உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாட்டுக்கு உங்களைக் கொண்டுவருவேன்; நான் அதை உங்களுக்கு உடைமையாகக் கொடுப்பேன். நானே கர்த்தர்’ ” என்றார்.
9மோசே இஸ்ரயேலருக்கு இவற்றை அறிவித்தார். ஆனால் அவர்களோ மனமுடைந்து, கொடூரமான அடிமைத்தனத்தில் துன்பப்பட்டதனால் அவனுக்கு செவிமடுக்கவில்லை.
10அப்போது கர்த்தர் மோசேயிடம், 11“நீ எகிப்திய அரசனாகிய பார்வோனிடம் போய், அவனுடைய நாட்டிலிருந்து இஸ்ரயேலரைப் போகவிடும்படி சொல்” என்றார்.
12ஆனால் மோசே கர்த்தரிடம், “இஸ்ரயேலரே நான் சொன்னதைக் கேட்காதபோது, பார்வோன் எப்படிக் கேட்பான்? நானோ தடுமாறும் உதடுகளுள்ளவன்” என்றார்.
மோசே மற்றும் ஆரோனின் குடும்ப அட்டவணை
13இவ்வாறு கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேலரைப் பற்றியும் எகிப்திய அரசன் பார்வோனைப் பற்றியும் பேசி, எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
14இஸ்ரயேலரின் குடும்பங்களின் தலைவர்கள் பின்வருமாறு.
யாக்கோபின் மூத்த மகனாகிய ரூபனின் மகன்மார்:
ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
ரூபனின் தலைமுறைகள் இவைகளே.
15சிமியோனின் மகன்மார்:
யெமுயேல், யாமின், ஓகாத், யாகின், சோகார், கானானியப் பெண்ணின் மகனான சாவூல் என்பவர்கள் ஆவர்.
சிமியோனுடைய தலைமுறைகள் இவைகளே.
16பதிவேட்டின்படி லேவியின் மகன்மாரின் பெயர்கள்:
கெர்சோன், கோகாத், மெராரி.
லேவி 137 வருடங்கள் வாழ்ந்தான்.
17லிப்னியும், சிமெயியும்
கெர்சோனின் தலைமுறையில் வந்த மகன்மார் ஆவர்.
18அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்:
கோகாத்தின் மகன்மார் ஆவர்.
கோகாத் 133 வருடங்கள் வாழ்ந்தான்.
19மெராரியின் மகன்மார்:
மகேலி, மூஷி என்பவர்கள்.
அவர்களுடைய பதிவேட்டின்படி லேவியின் தலைமுறைகள் இவைகளே.
20அம்ராம் தன் தந்தையின் சகோதரியான யோகெபேத்தை திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும், மோசேயையும் பெற்றெடுத்தாள்.
அம்ராம் 137 வருடங்கள் வாழ்ந்தான்.
21இத்சாரின் மகன்மார்
கோரா, நெப்பேக், சிக்ரி என்பவர்கள் ஆவர்.
22ஊசியேலின் மகன்மார்:
மிஷாயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள் ஆவர்.
23அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமான எலிசபாளை ஆரோன் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயாசாரையும், இத்தாமாரையும் பெற்றெடுத்தாள்.
24கோராகியரின் மகன்மார்:
ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள் ஆவர்.
கோராகிய தலைமுறைகள் இவைகளே.
25ஆரோனின் மகன் எலெயாசார் பூத்தியேலுடைய மகள்மாரில் ஒருத்தியைத் திருமணம் செய்தான்.
அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றெடுத்தாள். தலைமுறை தலைமுறையாக லேவிய குடும்பங்களின் கோத்திரத் தலைவர்கள் இவர்களே.
26ஆரோனும், மோசேயுமாகிய இவர்களுக்கு, “இஸ்ரயேலருடைய கோத்திரப் பிரிவுகளின்படி அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவாருங்கள்” என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். 27ஆரோனும், மோசேயுமாகிய இவர்களே எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவது பற்றி, எகிப்திய அரசன் பார்வோனிடம் பேசினார்கள்.
ஆரோன், மோசேக்காகப் பேசுதல்
28கர்த்தர் எகிப்தில் மோசேயுடன் பேசியபோது, 29கர்த்தர் மோசேயிடம், “நானே கர்த்தர். நான் உனக்குச் சொல்லும் எல்லாவற்றையும் எகிப்திய அரசன் பார்வோனுக்குச் சொல்” என்றார்.
30ஆனால் மோசே கர்த்தரிடம், “நான் தடுமாறும் உதடுகளுள்ளவனாயிருக்க, பார்வோன் எவ்வாறு நான் சொல்வதைக் கேட்பான்?” என்றார்.
Currently Selected:
யாத்திராகமம் 6: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.