தானியேல் 5:25-28
தானியேல் 5:25-28 TRV
“எழுதப்பட்ட எழுத்துக்கள்: ‘மெனெ, மெனெ, தெக்கேல் உபார்சின்.’ “இந்த எழுத்துக்களின் அர்த்தமாவது: “மெனெ: இறைவன் உனது ஆட்சிக் காலத்தை எண்ணிக் கணக்கிட்டு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார் என்பதாகும். “தெக்கேல்: நீ தராசுகளில் நிறுக்கப்பட்டு குறைவுடையவனாய் காணப்பட்டிருக்கிறாய் என்பதாகும். “உபார்சின்: உனது இராச்சியம் பிரிக்கப்பட்டு மேதியருக்கும், பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாகும்” என்றான்.





