YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் முன்னுரை

முன்னுரை
யாக்கோபின் சந்ததிகள் எகிப்திலே பலுகிப் பெருகி யாக்கோபின் புதுப்பெயரான இஸ்ரயேல் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். இறைவன் அவர்களை எவ்வாறு ஒரு நாடாக மாற்றினார் என்பதன் வரலாறு இதுவே. இறைவன் அவர்களை மோசேயின் தலைமையின்கீழ் எகிப்திலிருந்து விடுவித்த செயல்கள் இதில் கூறப்பட்டுள்ளது. இறைவனது கட்டளைக்குப் பார்வோன் கீழ்ப்படிய மறுத்ததால், அவர் எகிப்தைப் பாழாக்குவதற்காக பத்து வாதைகளை அனுப்பினார். இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்து சீனாய் மலையை அடைந்தார்கள். அங்கே பத்துக் கட்டளைகளையும், இறைசமுகக் கூடாரத்திற்கான திட்டத்தையும் இறைவன் அவர்களுக்குக் கொடுத்தார். இஸ்ரயேலருடன் அவருடைய உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in