இஸ்ரயேலர் அவர்களிடம், “நாங்கள் கர்த்தரின் கையால் எகிப்திலே இறந்திருக்கலாமே! நாங்கள் அங்கே இறைச்சிப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து, விரும்பிய உணவையெல்லாம் உட்கொண்டோமே; ஆனால் நீங்கள், இந்த முழு மக்கள் கூட்டமும் பட்டினியால் இறக்கும்படி இந்தப் பாலைவனத்துக்குள் எங்களைக் கொண்டுவந்திருக்கின்றீர்கள்” என்றார்கள்.
அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொருநாளும் வெளியே போய் அந்தந்த நாளுக்குப் போதுமானதைச் சேர்க்க வேண்டும். அதன்மூலமாக அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன்.