1
தானியேல் 12:3
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஞானமுள்ளவர்கள் வானங்களின் பிரகாசத்தைப் போலவும், பலரை நேர்மைக்கு வழிநடத்துகின்றவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றும் பிரகாசிப்பார்கள்.
Compare
Explore தானியேல் 12:3
2
தானியேல் 12:2
பூமியில் புழுதியில் புதைக்கப்பட்டிருக்கின்ற அநேக மக்கள் எழுந்திருப்பார்கள். சிலர் நித்திய வாழ்வுக்கும், மற்றவர்கள் நித்திய வெட்கத்துக்கும், இழிவுக்கும் எழுந்திருப்பார்கள்.
Explore தானியேல் 12:2
3
தானியேல் 12:1
“அக்காலத்தில் உன் மக்களைப் பாதுகாக்கின்ற பிரதான அதிபதியாகிய மிகாயேல் எழுவான். எந்தவொரு இனமும் தோன்றியதிலிருந்து அதுவரை ஒருபோதும் நிகழ்ந்திராத துன்பகாலம் ஒன்று வரும். ஆனால் அந்தக் காலத்தில் இறைவனது புத்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டவர்களாகக் காணப்படுகின்ற உனது மக்கள் விடுவிக்கப்படுவார்கள்.
Explore தானியேல் 12:1
4
தானியேல் 12:10
“அநேகர் தூய்மையாக்கப்பட்டு, கறையற்றவர்களாக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவார்கள். ஆயினும் தீயவர்கள் தொடர்ந்து தீயவர்களாகவே இருப்பார்கள். தீயவர்களில் யாரும், இவற்றை விளங்கிக்கொள்ள மாட்டார்கள். ஞானமுள்ளவர்களோ விளங்கிக்கொள்வார்கள்.
Explore தானியேல் 12:10